சிகரெட் எதிர்ப்பு குறும்படம் மாலை சுடர் | |
. | |
Thursday, 22 January, 2009 11:39 AM | |
. | |
புகை நமக்கு பகை என்பதை உணர்த்தும் வகையில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. | |
. | |
ராணுவத்தில் பணியாற்றிய கர்னல் எட்வின் ஜேசுதாஸ் என்பவரின் மகன் விஜய் விக்டர் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜெனிபர் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னை திரைப்பட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் மதன் கேப்ரியேல் இப்படத்தை இயக்கி உள்ளார். கலைமாமணி விருது பெற்ற ஷோபனா ரமேஷ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு குறும்படமாக உள்ள போதிலும் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத ஒரு வாலிபன், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுடன் பழகும் போது ஏற்படும் சம்பவங்களும், விளைவுகளும்தான் படத்தின் கதை. கதாநாயகனாக நடித்துள்ள விஜய் விக்டர் முறைப்படி கராத்தே, நடனம் போன்ற அனைத்து அம்சங்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார். சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளார். |
Monday, 19 September 2011
சிகரெட் எதிர்ப்பு குறும்படம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment